கறிவேப்பிலையின் 6 மருத்துவ பயன்கள்



Curry leaves health benefits in tamil, கறிவேப்பிலை தனித்துவமே அதன் மணம் தான்.  கருவேப்பிலையை நம் ஏராளமான உணவுகளில் சோ்க்கிறோம்.  அதுமட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்கவும் கருவேப்பிலையை பயன்படுத்தலாம். 

வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பி2 ஆகியவை அதிகம் நிறைந்திருக்கின்றன.  இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அதிக அளவில் கிடைக்கிறது.  கறிவேப்பிலையை நாட்டுப்புற மருத்துவத்தில் கால்சியம் குறைபாடுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. 

நாம் சாப்பிடும்போது தட்டில் இருக்கும் கறிவேப்பில்லையை ஒதுக்கி வைப்பதுதான் முதல் வேலையே.  அப்படி செய்வது மிகவும் தவறான செயல்.  அதை ஒதுக்குவதற்கு காரணம் அதைப் முழுமையாக அறியாமையே. 

பலரும் கருவேப்பிலையை வெறும் மணத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம் என்று எண்ணுகின்றனா்.  பல நோய்கள் வராமல் தடுக்கும் தன்மை அதற்கு உண்டு.  இது இரத்த அழுத்தத்திற்கும், நீாிழிவு நோய்க்கும் சிறந்த மருந்தாகும்.