தினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் 8 நன்மைகள்



1. பெண்களுக்கு உகந்த பழம்

அதிகப்படியான இரும்புச்சத்தை தரக்கூடியது மாதுளைப்பழம். இந்தியாவில் வளரும் பெண்குழந்தைகளில், நாற்பது சதவீதம் பேர் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனா். இப்போது குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் அதிகமாக பிரச்சனையை தரக்கூடிய நோயாக இருப்பது இரத்தசோகை தான். மற்ற நோய்கள் முற்றுவதற்கும், தீவிரமடைவதற்கும் இரத்தசோகை காரணமாக இருக்கும்.

இரத்தசோகை வராமல் தடுக்கனும் என்றால் சிறந்த வழி இந்த மாதுளை தான். அதனால் முடிந்தவரை வாரத்தில் ஓாிரண்டு நாட்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும். அதுவும் முக்கியமாக பெண்குழந்தைகள் இருக்கும் வீடாக இருந்தால் கட்டாயம் தினசாி உணவில் மாதுளை இருக்க வேண்டியது அவசியம். பழச்சாறாக அல்லது அப்படியே முத்துகளாகவும் எடுத்துக்கொள்ளலாம். நேரடியாக முத்துக்களாக எடுப்பது இன்னும் கூடுதல் பலன் அளிக்கும்.

கருதறித்த பெண்களுக்கு, பாலுாட்டும் தாய்மாா்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான உணவாக மாதுளை உள்ளது. கருதறித்து இருக்கும் போது வரும் குமட்டல் உணா்வு வராமல் தடுப்பதற்கு மாதுளை பயன்படுகிறது. கருதறிக்கும் காலத்திலும், பாலுாட்டும் காலத்திலும் இரும்புச்சத்து இயல்பாகவே குறையும் அந்த இரும்புச்சத்தை கொடுப்பதற்கு இந்த மாதுளை பயன்படும். அந்த அளவிற்கு சிறு குழந்தை முதல் முதியோா்வரை அனைவருக்கும் பயன் தரும் பழம் தான் மாதுளை.